வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash

அடித்து விளாசிய இஷான் கிஷன் - 94 பந்துகளில் 173 ரன்களை குவிப்பு!!

ஜார்கண்ட் அணியின் கேப்டனும், தொடக்க வீரருமான இஷான் கிஷன் 94 பந்துகளில் 173 ரன்களை குவிப்பு. 

 
உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே போட்டித் தொடர் இன்று 6 இடங்களில் தொடங்குகிறது. மொத்தம் 38 அணிகள் கலந்துகொள்ளும் இந்த கோப்பையில் 6 பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. 
 
இந்நிலையில் இன்று ஹோல்கார் கிரிக்கெட் மைதானத்தில் மத்திய பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ஜார்கண்ட் அணி துவக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 
 
ஜார்கண்ட் அணியின் கேப்டனும், தொடக்க வீரருமான இஷான் கிஷன் 94 பந்துகளில் 173 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இதில் 11 சிக்ஸர்களும் 19 பவுண்டரிகளும் அடங்கும். இஷான் கிஷன் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுபவர்.
 
அந்த வகையில், இன்றையப் போட்டியில் 50 ஓவர் முடிவில் ஜார்கண்ட் அணி 9 விக்கெட் இழப்புக்கு 422 ரன்கள் எடுத்தது.