வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 20 பிப்ரவரி 2021 (08:53 IST)

எனக்கு 15 கோடியா? வாயைப் பிளந்த நியுசிலாந்து வீரர்!

இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட வீரர்களில் நியுசிலாந்து அணியின் ஜேமிசனும் ஒருவர்.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ஏப்ரலில் தொடங்க உள்ள நிலையில் அதற்கான வீரர்கள் ஏலம் இரு தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது. ஒவ்வொரு அணியும் ஒரு சில வீரர்களை விடுவித்துள்ள நிலையில் மற்ற அணி வீரர்களை வாங்குவதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் நியுசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ஜேமிசன் பெங்களூர் அணியால் 15 கோடிக்கு எடுக்கப்பட்டார். இதுவரை 10 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவருக்கு இவ்வளவு தொகையா என அதிர்ச்சியடைந்தனர் ரசிகர்கள்.

இந்நிலையில் தனக்கு இவ்வளவு பெரிய தொகை என்பது குறித்து பேசியுள்ள ஜேமிசன் ‘எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. 15 கோடிக்கு எவ்வளவு நியுசிலாந்து டாலர்கள் என நள்ளிரவில் எழுந்து உட்கார்ந்து கணக்கு போட்டு பார்த்தேன்’ எனக் கூறியுள்ளார்.