1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 3 பிப்ரவரி 2021 (19:14 IST)

தமிழக அணிக்காக விளையாடுகிறார் நடராஜன்: அதிகாரபூர்வ அறிவிப்பு

விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டியில் தமிழக அணிக்காக நடராஜன் விளையாடுகிறார் என முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது 
 
உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே போட்டியில் பங்கேற்பதற்கான தமிழக அணி வீரர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தினேஷ் கார்த்தி தலைமையில் தமிழக அணியில் மொத்தம் 20 வீரர்கள் பங்கேற்கும் பட்டியலை தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது
 
இந்த பட்டியலில் தமிழக வீரர் நடராஜன் தமிழக அணிக்காக விளையாடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த நடராஜனுக்கு இந்தியா-இங்கிலாந்து தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற நிலையில் தற்போது தமிழக அணிக்காக விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது