ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 22 அக்டோபர் 2023 (10:23 IST)

வெயில் மண்டைய பொளந்துருச்சு.. இங்கிலாந்து தோல்விக்கு இதுதான் காரணமா? – ஜாஸ் பட்லர் விளக்கம்!

SA vs ENG
நேற்று நடைபெற்ற ஐசிசி உலக கோப்பை போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் கருத்து தெரிவித்துள்ளார்.



ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டிகளில் 20வது போட்டியில் நேற்று இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணியின் ரன்களை இங்கிலாந்து கண்ட்ரோல் செய்யாமல் போகவே 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 399 ரன்களை குவித்தது தென்னாப்பிரிக்க அணி.

ஆனால் அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி மோசமான பேட்டிங்கால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க தொடங்கியது. தென்னாப்பிரிக்காவின் அசுர பந்துவீச்சில் விக்கெட்டுகள் பறக்க 22வது ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 170 ரன்களில் அவுட் ஆனது நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி.

இதுகுறித்து பேசியுள்ள இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் “இந்த தோல்வி மிகவும் ஏமாற்றத்தை அளிக்கிறது. நாங்கள் சிறப்பான ஆட்டத்தை அளிக்கவே இங்கு வந்தோம். முதல் இன்னிங்ஸில் பல விஷயங்கள் திட்டமிட்டப்படி நடக்கவில்லை. இந்த வெப்பம் எங்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. இனி வரும் அனைத்து போட்டிகளிலும் நாங்கள் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்” என கூறியுள்ளார்.

Edit by Prasanth.K