பூ இல்லடா பயர்… புஷ்பா ஸ்டைலில் சதத்தைக் கொண்டாடிய டேவிட் வார்னர்!
பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 367 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகிய இருவரும் சதம் அடித்து அசத்தினர்.
இந்த போட்டியில் 124 பந்துகளில் 163 ரன்கள் சேர்த்தார் ஆஸி அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர். சதமடித்த குஷியில் அவர் புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் செய்யும் மேனரிசத்தை செய்துகாட்டி சதத்தை கொண்டாடினார். அந்த கொண்டாட்டத்தை ரசிகர்கள் கைதட்டி ரசித்தனர்.
பின்பு பேட் செய்த பாகிஸ்தான் அணி 305 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் 62 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஆட்டநாயகனாக டேவிட் வார்னர் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் நான்கு அணிகளுக்குள் புள்ளிப்பட்டியலில் சென்றுள்ளது.