1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 25 நவம்பர் 2023 (07:40 IST)

கேப்டன் ரோஹித் ஷர்மாவை கழட்டிவிட உள்ளதா மும்பை இந்தியன்ஸ்?

மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரில் அதிக முறை கோப்பை வென்ற அணிகளில் ஒன்று. இதுவரை ரோஹித் ஷர்மா தலைமையில் 5 முறை கோப்பையை வென்றுள்ளது. ஆனால் கடந்த 2020 ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்த அணியின் செயல்பாடு சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

இந்நிலையில் டிசம்பர் 19 ஆம் தேதி நடக்க உள்ள மினி ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி எந்த வீரர்களை எல்லாம் எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கிடையில் அந்த அணியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அந்த அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவையே விடுவிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இது சம்மந்தமாக அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் இந்த செய்தி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மற்றொரு தகவலின் படி குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவை ரோஹித் ஷர்மாவை கொடுத்து மாற்றிக் மொள்ள மும்பை இந்தியன்ஸ் அணி பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் சொல்லப்படுகிறது.