1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 23 நவம்பர் 2023 (18:40 IST)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. டாஸ் வென்ற இந்தியா எடுத்த முடிவு..!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற இருக்கும் நிலையில் சற்றுமுன் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. 
 
அதில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் டாஸ் வென்றதை எடுத்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதனை அடுத்து இன்னும் ஒரு சில நிமிடங்களில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் இந்திய அணி தோல்வி அடைந்துள்ள நிலையில்  மீண்டும் ஆஸ்திரேலியா அணியுடன் இளம் வீரர்கள் கொண்ட அணி களமிறங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
இந்த போட்டியில் விளையாடும் இந்திய அணியின் வீரர்கள் பின் வருமாறு:
 
யஷ்வி ஜெய்ஸ்வால், ருத்ராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், திலக் வர்மா, ரிங்கு சிங், அக்சர் பட்டேல், ரவி பிஷ்னாய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ப்ரசித் கிருஷ்ணா
 
Edited by Mahendran