இந்திய அணி போராடி தோல்வி....
இந்தியா- தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் இன்று இந்தியா அணி தோல்வி அடைந்தது.
இன்றைய போட்டியில், கேப்டன் டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்கத்தில் ரன் சேர்க்க திணறினர். இதையடுத்து, டெம்பா –ராசி வான் ஜோடி இந்திய பந்துவீச்சை நாலாப்பக்கமும் சிதறடித்தனர்.
எனவே இவ்விரு வீரர்களும் சதம் விளாசினர். இதனால் தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 296 ரங்கள் குவித்து, இந்தியாவுக்கு 297 ரங்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.டெம்பா 110 ரங்களும், ராசி வான் டுசன் 129 ரனகள் எடுத்தனர்.
இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணியில் கோலி 51 ரங்களிலும், தவான் 70 ரங்களிலும் எடுத்து வெளியேறினர்.
ஆனால் அடுத்தடுத்து வீரர்கள் வெளியேறியதால் தென்ப்பாப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி 31 ரங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.