லீக் 20 மகளிர் கிரிக்கெட்!.. பெங்களூருக்கு 144 ரன் இலக்கு வைத்த உத்தரபிரதேசம்!...
ஐந்து அணிகள் இடையிலான மகளிர் பிரீமியம் லீக் டி20 கிரிக்கெட் போட்டி கடந்த 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மகளிர் பிரீ இன்று ஐந்தாவது லீக் ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் உத்தரப்பிரதேச வாரியர்ஸ் அணியோடு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதி வருகிறது.
நவி மும்பையில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து உபி வாரியர் அணி ஆட்டத்தை துவங்கினார்கள்.. கேப்டன் மேக் லென்னிங் மற்றும் ஹெர்லின் டியோல் முதல் ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள்.
ஆனால் லென்னிங் 14 ரன்களிலும் டியோல் 11 ரன்களிலும் ஆட்டத்தை இழந்தனர். அடுத்து வந்த சிலரும் பெரிதாக ரன்கள் எடுக்காமல் அவுட் ஆகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தனர்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் உபி வாரியஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்திருந்தது. தற்போது 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற சவாலுடன் பெங்களூர் அணி களமிறங்கி விளையாடி வருகிறது.