இரண்டாவது ஒருநாள் போட்டி… இந்திய அணி பரிதாப தோல்வி
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் அதில் இந்திய அணி பரிதாபகரமாக தோல்வி அடைந்தது.
நேற்று நடந்த போட்டியில் இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ஹர்திக் பாண்ட்யா அணியை வழிநடத்தினார். டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஜோடிகள் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தாலும் அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 181 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கான 182 ரன்களை எளிதாக சேர்த்தது. அந்த அணியின் ஷாய் ஹோப் அதிகபட்சமாக 62 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.