திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: புதன், 2 அக்டோபர் 2024 (14:41 IST)

கவாஸ்கரின் 50 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜெய்ஸ்வால்!

இந்திய அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த தொடக்க ஆட்டக்காரராக உருவாகி வருகிறார் ஜெய்ஸ்வால். 22 வயதாகும் ஜெய்ஸ்வால் இதுவரை 11 போட்டிகளில் மட்டுமே விளையாடி 1129 ரன்கள் சேர்த்துள்ளார். இதுவரை இரண்டு இரட்டை சதங்கள் அடித்துள்ளார்.

இந்நிலையில் நடந்து முடிந்த வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்து ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.  நேற்றைய போட்டியில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் கவாஸ்கர் படைத்த ஒரு சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

கவாஸ்கர் தன்னுடைய 22 ஆவது வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானபோது, அதே ஆண்டில் 913 ரன்கள் சேர்த்தார். ஒரு இளம் வீரர் தன்னுடைய 23 வயதுக்குள் சேர்த்த அதிக ரன்கள் இதுவாகதான் 50 ஆண்டுகளாக இருந்தது. அந்த சாதனையை ஜெய்ஸ்வால் இப்போது முறியடித்துள்ளார். அவர் இந்த ஆண்டில் இதுவரை மட்டும் 929 ரன்கள் சேர்த்து கவாஸ்கர் சாதனையை முறியடித்துள்ளார்.