1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. india win against srilanka second T20

இந்தியா - இலங்கை போட்டியில் மழை.. ஜெய்ஸ்வால் - ஹர்திக் அதிரடி ஆட்டத்தால் வெற்றி..!

இந்தியா
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியின் இடையில் மழை பெய்தாலும் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.

நேற்று நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 89 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. பெரேரா அபாரமாக விளையாடி 53 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் ரவி பிஸ்னோய் 3 விக்கெட்டுகளையும் மற்றும் ஹர்திக், சிராஜ், அர்ஷ்தீப் சிங் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

இந்த நிலையில் இந்தியா பேட்டிங் செய்ய ஆரம்பிக்கும் போது திடீரென மழை பெய்ததால் 8 ஓவர்களில் 78 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இந்தியாவுக்கு இலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் இந்திய அணியின் ஜெய்ஸ்வால், ஹர்திக் பாண்டியா, கேப்டன் சூர்யா குமார் யாதவ் ஆகியோர் அதிரடியாக விளையாடி 6.3 ஓவர்களில் 81 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழி வகுத்தனர். இந்த போட்டியில் ரவி பிஷ்னோய் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் .

இந்த நிலையில் மூன்று போட்டிகள் தொடர் கொண்ட இந்த தொடரில் இந்தியா 2-0  என்ற கணக்கில் தொடரை வென்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற உள்ளது

Edited by Siva
 
அடுத்த கட்டுரையில்
5 முறை இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் தோல்வி.. 6வது சாம்பியன் ஆன இலங்கை..!