1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Rishab pant and sanjeev goenka becomes troll material in social media

கோயங்கா கிட்ட பண்ட் மாட்டல… பண்ட் கிட்டதான் கோயங்கா மாட்டிகிட்டாரு – நெட்டிசன்கள் ட்ரோல்!

ரிஷப் பண்ட்
நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை டெல்லி கேப்பிடல்ஸ் அணி எளிதாக வீழ்த்தியது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 159 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அந்த அணிக்கு நல்ல தொடக்கம் அமைந்த போதும் அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியவில்லை.

அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் வழக்கம் போல சொதப்பில் 2 பந்துகளில் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் ஆடவந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 18 ஆவது ஓவரில் 2 விக்கெட்கள் இழப்புக்கு இலக்கை எட்டியது.  அந்த அணியின் கே எல் ராகுல் அதிகபட்சமாக 57 ரன்கள் சேர்த்தார்.

இந்த தொடருக்காக லக்னோ அணியால் 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ரிஷப் பண்ட் இதுவரை 9 இன்னிங்ஸ்களில் ஒரே ஒரு அரைசதத்தைத் தவிர மிக மோசமாக விளையாடி வருகிறார். இதனால் அவர் விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் நிலையில் லக்னோ அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்காவும் நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
பேசவந்த சஞ்சீவ் கோயங்காவைக் கண்டுகொள்ளாமல் சென்ற கே எல் ராகுல்..!