வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 13 அக்டோபர் 2023 (08:02 IST)

ஆஸ்திரேலியா அணியில் கம்மின்ஸ்க்கு இடமே இல்லை… இவர்தான் கேப்டனாக இருக்க வேண்டும்- கம்பீர் கருத்து!

ஆஸ்திரேலியா அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் இரண்டு போட்டிகளையும் தோற்று புள்ளிப்பட்டியலில் 9 ஆவது இடத்தில் பரிதாபகரமான நிலையில் உள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் தோல்விக்கு கேப்டன் பாட் கம்மின்ஸைக் காரணம் காட்டிப் பேசியுள்ளார். அதில் “பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாட தகுதியற்றவர் என்று நான் நினைக்கிறேன். பேட்டிங் பிரிவில் கேமரூன் கிரீன் பங்களிக்க முடியும் என்பதால், அவருக்குப் பதிலாக கேமரூன் கிரீனை சேர்க்கலாம்” என்று கூறியுள்ளார். பாட் கம்மின்ஸ் இரண்டு போட்டிகளிலும் பவுலிங்கில் மிக மோசமாக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆஸ்திரேலிய அணியை ஸ்டீவ் ஸ்மித்தான் வழிநடத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். கம்பீரின் இந்த கருத்துக்கு இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் ஆதரவு கிடைத்து வருகிறது.