ஆஸ்திரேலியாவுக்கு 2வது தோல்வி.. 134 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி..!
நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தது. ஏற்கனவே இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அந்த அணி தோல்வி அடைந்த நிலையில் நேற்றைய தோல்வி அந்த அணிக்கு இரண்டாவது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரரான குவிண்டன் டீகாக் மிக அபாரமாக விளையாடி சதம் அடித்தார்.
இதனை அடுத்து 312 என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணி 40.5 ஓவர்களில் 177 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. லாபு சாஞ்சே மட்டும் ஓரளவு நிலைத்து 46 ரன்கள் எடுத்தார். இதனை அடுத்து தென்னாப்பிரிக்கா அணி 114 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. அது மட்டும் இன்றி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva