வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 10 மார்ச் 2020 (09:33 IST)

கொரோனா வந்தால் என்ன? ஐபிஎல் நடத்தியே தீருவோம்! – விடாப்பிடி கங்குலி!

இந்தியாவெங்கும் கொரோனா பரவி வரும் சூழலில், எப்பாடுப்பட்டாவது ஐபிஎல்லை நடத்துவோம் என கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட 13வது ஐபிஎல் டி20 போட்டிகள் 29ம் தேதி முதல் தொடங்க இருக்கின்றன. இந்நிலையில் இந்தியாவில் பல இடங்களிலும் கொரோனா வேகமாக பரவி வருவதால் மக்கள் ஒரே இடத்தில் அதிகமாக கூடுவதை தவிர்க்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதனால் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தள்ளி வைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஐபிஎல் போட்டிகள் மும்பையில் தொடங்க உள்ள நிலையில் மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டிகளை தள்ளி வைக்கலாமா? என்பது குறித்து ஆலோசனை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் இதுகுறித்து பேசியுள்ள பிசிசிஐ தலைவர் கங்குலி ”ஐபிஎல் போட்டிகளை தள்ளி வைக்கும் எண்ணம் இல்லை. இந்த போட்டி தொடர்புடைய அனைவருக்கும் போட்டியின் போது அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும். கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரமாக மேற்கொள்ளும்” என்று கூறியுள்ளார்.

ஆனால் கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் பார்வையாளர்கள் குறைய வாய்ப்பிருப்பதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.