திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (18:09 IST)

இந்திய வீரர்களுக்கு போராட்ட குணமில்லை: காம்பீர் விமர்சனம்!

லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்திடம் மோசமான தோல்வியை சந்தித்தது. இதையடுத்து கோலி தலைமையிலான இந்திய அணியை முன்னாள் வீரர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர். 
இந்நிலையில், கவுதம் காம்பீர் இந்திய அணியை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியது பின்வருமாறு, இந்தியா அணி டெஸ்ட் போட்டியை விளையாடிய விதம் அனைவரையும் ஏமாற்றியது. இந்திய வீரர்களிடம் போராட்ட குணமே இல்லாமல் போய்விட்டது.
 
இங்கிலாந்து பந்துவீச்சை சிறிது கூட எதிர்க்காமல் அனைத்து வீரர்களும் சரணடைந்துவிட்டனர். இந்திய அணியினர், இங்கிலாந்து பந்துவீச்சை சமாளித்து டெஸ்ட் போட்டியை கடைசி நாள் வரை எடுத்து சென்றிருக்க வேண்டும்.
 
இந்த தொடரில் இந்தியா மீண்டெழுந்து வரவேண்டும். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் அது நடக்காது என்றே தெரிகிறது என விமர்சனம் செய்துள்ளார்.