இந்திய டெஸ்ட் கிரிக்கெட் முன்னாள் கேப்டன் மரணம் : சச்சின் இரங்கல்

Last Modified வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (15:46 IST)
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் மறைவுக்கு சச்சின் தெண்டுல்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 
உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் நேற்று அஜித் வடேகர் மரணமடைந்தார். அவருக்கு வயது 77. அஜித் வடேகர் இந்திய அணிக்காக 37 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 2,113 ரன்கள் சேர்த்துள்ளார். அவரது தலைமையில் இந்திய அணி 1971ம் ஆண்டு இங்கிலாந்து (1-0) மற்றும் வெஸ்ட் இண்டீஸ்(1-0) என டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி சாதனை படைத்தது.

 
அவரின் மறைவுக்கு இந்திய அணியின் முன்னாள் ஆட்டக்காரர் சச்சின் தெண்டுல்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுபற்றி டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில் “வடேகர் காலமானர் என்கிற செய்தி கேட்டு மனமுடைந்தேன். 90களில் அணி வீரர்களின் திறமைகளை வெளிக்கொணருவதில் அவர் முக்கிய பங்காற்றினார். அவருடைய அறிவுரைகளுக்கும், வழிகாட்டுதலுக்கும் நாம் எப்போதும் நன்றி உடையவராக இருப்போம். இந்த கடுமையான சூழ்நிலையை அவரின் குடும்பத்தினருக்கு சந்திக்க சக்தியுடன் இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :