திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 (23:20 IST)

ரூ.30 ஆயிரம் கோடி சொத்து: இந்தியாவின் பணக்கார பெண் பட்டியலில் சென்னை பெண்

இந்தியாவின் பெண் பணக்காரர் குறித்த பட்டியல் ஒன்றை கோடாக் வெல்த் ஹுருன் என்ற நிறுவனம் எடுத்து அதன் முடிவை சற்றுமுன் வெளியிட்டது. இதன்படி சென்னையை சேர்ந்த ஹெச்.சி.எல் என்ற ஐ.டி நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலரான, ரோஷினி நாடார் ரூ.30,000 கோடி சொத்துக்களுடன் 2வது இடத்தில் உள்ளார். அவருக்கு சென்னையை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த பட்டியலில் முதல் இடத்தில் கோத்ரேஜ் நிறுவனத்தின் ஸ்மிதா கிரிஸ்னா என்பவர் ரூ.35,000 கோடி சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் டைம்ஸ் குழுமத்தின் தலைவர் இந்து ஜெயின் 26,000 கோடி சொத்துக்களுடன் 3வது இடத்திலும், பையோகான் நிறுவனத்தின் தலைவர் கிரண் மஜும் தார் 4வது இடத்திலும் ஹெச்.சி.எல் நிறுவனத்தின் கிரண் நாடார் 5வது இடத்திலும் உள்ளனர்.
 
அதேபோல் யூஎஸ்வி நிறுவனத்த்ஹின் லீனா காந்தி, ஜெ.எஸ்.டபிள்யூ நிறுவனத்தின் சங்கீதா ஜிண்டால், அரிஸ்டா நெட்வொர்க் நிறுவனத்தின் ஜெய்ஸ்ரீ உல்லல், தெர்மாக்ஸ் நிறுவனத்தின் அனு அகா மற்றும் அவுட்கம் ஹெல்த் நிறுவனத்தின் ஷாரதா அகர்வால் ஆகியோர் 6 முதல் 10 வது இடத்தில் உள்ளனர்.