திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 19 ஜூலை 2022 (22:51 IST)

பிரபல கிரிக்கெட் வீரர் ஓய்வு அறிவிப்பு..ரசிகர்கள் அதிர்ச்சி

dinesh ramdin
வெஸ்டிண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தினேஷ் ராம்தின் இன்று தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த தினேஷ் ராம்தின். இதுவரை 74 டெஸ்ட் ,139 ஒரு நாள் போட்டிகள், 71டி-20 போட்டிகளில்  விளையாடியுள்ளார்.

இவர் ஜுலை 2005 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் அறிமுகம் ஆனார். அதன்பின், சிறப்பாக விளையாடி கேப்டனாக உயர்ந்தார்.

 நேற்று வெஸ்ட் இண்டீஸ் வீரர், சிம்மன்ஸ் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றத்தை அடுத்து, ராம்தின் தனது ஓய்வை அறிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.