புதன், 18 செப்டம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 19 ஜூலை 2024 (08:05 IST)

21 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராக கோலியை அறிவித்த ESPN நிறுவனம்!

ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கிரிக்கெட்டின் முகமாக ஒரு வீரர் இருப்பார். அந்த வகையில் இப்போது உச்சப் புகழோடு உலகளவில் ரசிகர்களைப் பெற்று இருக்கிறார் கோலி. சமீபத்தில் டி 20 உலகக் கோப்பையை வென்ற அணியில் அவர் இடம்பெற்றிருந்தார். அவர் உலகக் கோப்பையோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர, அந்த புகைப்படம் ஆசியாவிலேயே அதிகம் பேரால் லைக் செய்யப்பட்ட புகைப்படம் என்ற சாதனையைப் படைத்தது.

இந்திய கிரிக்கெட்டின் கேப்டனாக இருந்து பல சாதனைகளைப் படைத்த கோலி, சில ஆண்டுகளுக்கு முன்னர் பிசிசிஐ உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பதவி விலகினார். அதன் பின்னர் அணியில் ஒரு வீரராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ESPN நிறுவனம் 21 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. அதில் கிரிக்கெட்டில் இருந்து கோலி மட்டுமே இடம்பெற்றுள்ளார். இதையடுத்து கோலிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.