1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Rohith Sharma and virat kohli cant be replaced kapil dev said

விராட்டும் ரோஹித்தும் ஈடு செய்ய முடியாதவர்கள்… முன்னாள் கேப்டன் கருத்து!

விராட் கோலி
17 ஆண்டுகளுக்குப் பிறகு டி 20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது. உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி பரபரப்பான போட்டியின் முடிவில் இரண்டாவது முறையாக சாம்பியன் ஆனது.

இந்த கோப்பையை வென்றதன் மூலம் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகிய இருவரும் 20-20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டனர். இளைய தலைமுறையினருக்கு வழிவிடும் விதமாக இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் இடத்தை யார் நிரப்பப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் “ரோஹித் மற்றும் விராட் கோலி இல்லாதது டி 20 கிரிக்கெட்டுக்கு பாதகமானதுதான். அவர்கள் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. எப்படி ஒரு நாள் கிரிக்கெட்டில் சச்சின் மற்றும் தோனியின் இடத்தை நிரப்ப முடியாதோ அதுபோல ரோஹித் மற்றும் கோலியும்” என்க கூறியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
உள்ளே வந்ததும் குழப்பத்தை ஆரம்பித்த கம்பீர்…. டி 20 அணிக்கு புதிய கேப்டன் யார்?