1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (16:06 IST)

ஒரு தோல்வியால் தரவரிசையில் சரிந்த இந்தியா! – இங்கிலாந்து முதலிடம்!

தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து – இந்தியா டெஸ்ட் தொடரில் வென்றதன் மூலம் ஐசிசி தரவரிசையில் இங்கிலாந்து முதலிடத்தை பிடித்துள்ளது.

இங்கிலாந்து – இந்தியா இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இந்தியாவை 227 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதனால் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னணியில் உள்ளது.

இந்நிலையில் ஐசிசி உலக டெஸ்ட் தரவரிசைக்கான பட்டியல் இன்று வெளியானது அதில் இங்கிலாந்து அதிக புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் எதிர் வரும் 3 டெஸ்ட் தொடர்களிலும் சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயம் இந்தியாவிற்கு உள்ளது.