13 மாதங்களுக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த ஷமி… இங்கிலாந்து டி 20 தொடரில் வாய்ப்பு!
2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து முழங்கால் காயத்தினால் அவதிப்பட்ட ஷமிக்கு லண்டனில் ஜனவரி மாதம் ஊசி மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவரது காயத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை என்பதால் அவருக்கு கனுக்காலில் அறுவை சிகிச்சை லண்டனில் நடந்தது.
அதன் பின்னர் பல மாதங்கள் பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடெமியில் பயிற்சியை மேற்கொண்டு குணமானார். இதையடுத்து ரஞ்சிக் கோப்பை தொடரில் பெங்கால் அணிக்காக விளையாடிய அவர் மத்திய பிரதேச அணிக்கு எதிராக 7 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். ஆனாலும் அவருக்கு காலில் வீக்கம் இருந்ததால் அவர் பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் விளையாடவில்லை.
இதையடுத்து அவர் இப்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடரில் விளையாட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் கிட்டத்தட்ட 13 மாதங்களுக்குப் பிறகு ஷமி இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.
இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ரின்கு சிங். நிதீஷ் குமார்,அக்ஸர் படேல், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னாய், வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜுரெல்