வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (11:49 IST)

சென்னையில் திருமண விழாவில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்ப்பு!

சென்னையில் திருமண விழாவில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்ப்பு!
சென்னையில் நடந்த திருமணம் ஒன்றில் திருமணத்திற்கு வருகை தந்தவர்களின் பொழுதுபோக்கிற்காக திருமண மண்டபத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் சென்னை டெஸ்ட் போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்த திருமண வீட்டாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் அணிகளுக்கிடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை வெல்வதற்கு இந்திய அணி இன்னும் 276 ரன்கள் எடுக்க வேண்டும் என்பதும் கையில் 4 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று சென்னையில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்தியா இங்கிலாந்து இடையே நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டியை திருமண குடும்பத்தினர் நேரடி ஒளிபரப்பு செய்யும் வகையில் ஏற்பாடு செய்திருந்தனர். கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டே திருமண மண்டபத்தில் இருந்த பார்வையாளர்கள் திருமணத்திலும் கலந்து கொண்டனர். வித்தியாசமான முறையில் திருமண மண்டபத்தில் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை ஒளிபரப்பு செய்த குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது