செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (10:28 IST)

புஜாரா விக்கெட்டை இழந்த இந்தியா… தொடக்கமே அதிர்ச்சி!

இந்திய அணி ஐந்தாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய சிறிது நேரத்திலேயே புஜாராவின் விக்கெட்டை இழந்துள்ளது.

இந்திய அணி பாலோ ஆன் ஆனாலும் இங்கிலாந்து அணியே தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் பேட் செய்தது. முதல் இன்னிங்ஸ் போல இல்லாமல் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி இங்கிலாந்து அணியை 178 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கியுள்ளது. இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர் அஸ்வின் அற்புதமாக பந்து வீசி 6 விக்கெட்களைக் கைப்பற்றினார். இதன் மூலம் இந்திய அணிக்கு 419 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் தொடர்ந்து ஆடிய இந்திய அணி ஆட்டமுடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 39 ரன்களை சேர்த்துள்ளது. இன்று ஐந்தாம் நாளில் வெற்றிக்கு 381 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி அட்டம் தொடங்கிய சற்று நேரத்திலேயே சுவர் போல நின்று விளையாடக் கூடிய சத்தேஷ்வர் புஜார விக்கெட்டை இழந்துள்ளது. அதன் பின்னர் களத்துக்கு வந்த கோலி சுப்மன் கில்லோடு இணைந்து விளையாடி வருகிறார். இந்திய அணி தற்போது வரை 2 விக்கெட்களை இழந்து 91 ரன்கள் எடுத்துள்ளது.