வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 14 ஜூன் 2022 (16:06 IST)

தினேஷ் கார்த்திக்குக்கு அணியில் வாய்ப்பு இருக்குமா? கௌதம் கம்பீர் சொன்ன கருத்து!

இந்திய டி 20 அணியில் கடுமையான போராட்டத்துக்குப் பிறகு இணைந்துள்ளார் தினேஷ் கார்த்திக்.

இந்திய கிரிக்கெட் வீரர்களில் சிறப்பான பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் விளங்குபவர் தினேஷ் கார்த்திக். கடந்த பல சீசன்களாக ஐபிஎல்லில் சிறப்பான விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் நீண்ட காலமாக இந்திய கிரிக்கெட் அணியின் சுற்றுபயண ஆட்டங்கள் உள்ளிட்டவற்றில் இடம் பெறாமல் இருந்தது அவரது ரசிகர்களுக்கு ஒரு குறையாக இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணியில் தினேஷ் கார்த்திக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அவரின் சிறப்பான ஆட்டமே அவருக்கு இந்த இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது. ஆனால் அவருக்கு டி 20 உலகக்கோப்பை அணியில் இடம் கிடைப்பது எளிதில்லை என்று கம்பீர் கூறியுள்ளார். அவர் கூறுகையில் “ஓய்வில் இருக்கும் மூத்த வீரர்கள் வரும் பட்சத்தில் தினேஷ் கார்த்திக்கின் இடம் கேள்விக்குள்ளாகும். அதனால் அவர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அதுமட்டுமில்லாமல் அவர் நிறைய பந்துகளை எதிர்கொண்டு விளையாட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.