1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 22 மே 2022 (19:31 IST)

இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் மற்றும் உம்ரான் மாலிக்: தெ.ஆப்பிரிக்கா தொடரில் பங்கேற்பு

dinesh and umran
இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் மற்றும் உம்ரான் மாலிக்: தெ.ஆப்பிரிக்கா தொடரில் பங்கேற்பு
ஐபிஎல் தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடிய தினேஷ் கார்த்திக் மற்றும் உம்ரான் மாலிக் ஆகிய இருவரும் இந்திய அணியில் விளையாட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தினேஷ் கார்த்திக் மிகச்சிறந்த வீரராக இருந்தார் என்பதும் அதிரடியாக பல போட்டிகளில் ரன்களை குவித்தார் என்பதும் தெரிந்ததே 
 
அதேபோல் உம்ரான் மாலிக் மிகச் சிறப்பாக பந்து வீசினார் என்பதும் இந்த தொடரில் மிக அதிக வேகத்தில் பந்து வீசிய அவர்தான் என்பது குறிப்பிடத்தகுந்தது.
 
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இடம் பெற்றுள்ளார்.  இவர் 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கும் தென்னாப்பிரிக்கா தொடரில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது