1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 26 மார்ச் 2024 (22:13 IST)

சிஎஸ்கேவின் சிக்ஸர் மழையில் குளித்த சேப்பாக்கம் மைதானம்! – தோனி இல்லாததுதான் குறை!

CSK
இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் போட்டியில் முதலில் களமிறங்கிய சிஎஸ்கே சிக்ஸர் மழையை பொழிந்துள்ளது.



இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் இரண்டாவது போட்டியில் மோதி வருகின்றன.

முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி ஆரம்பம் தொட்டே சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விளாசியது. தொடக்கமே அதிரடி ஆட்டம் ஆட தொடங்கிய ரச்சின் ரவீந்திரா 20 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் விளாசி 46 ரன்களை குவித்து 5 ஓவர்களுக்குள் அதிசயம் நடத்தினார். தொடர்ந்து ஷிவம் துபேவும் 23 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளை விளாசி 51 ரன்களை குவித்தார். ருதுராஜ் கெய்க்வாட்டும் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளும் விளாசி 46 ரன்களை குவித்தார்.


இவ்வளவு மட்டுமல்லாமல் புதிதாக சிஎஸ்கேவுக்காக களமிறங்கிய இளம் வீரர் சமீர் ரிஸ்வி கடைசி 18வது ஓவரில் உள்ளே நுழைந்து தன் பங்குக்கு 6 பந்துகளில் 2 சிக்ஸர்களை விளாசி அவுட் ஆனார்.

இப்படியாக 20 ஓவர் முடிவதற்குள் 11 சிக்ஸர்கள், 16 பவுண்டரிகளை விளாசி சேப்பாக்கம் மைதானத்தை சிக்ஸர்களில் குளிப்பாட்டியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். 207 ரன்களை டார்கெட்டாக கொண்டு தொடர்ந்து களமிறங்கி சேஸிங் செய்து வரும் குஜராத் டைட்டன்ஸ் அணி 4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்களை சேர்த்துள்ளது.

Edit by Prasanth.K