1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. AB Devilliers and scott styris challenge in commentary

வர்ணனையின் போது ஸ்டைரிஸோடு நடந்த வாக்குவாதம்… தினேஷ் கார்த்திக்கால் தப்பித்த டிவில்லியர்ஸ்!

ஐபிஎல் 2024
ஐபிஎல் 17 ஆவது சீசன் தொடங்கி தற்போது ஆரம்பகட்ட போட்டிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடந்த போட்டி கடைசி ஓவர் திரில்லராக நடந்து முடிந்தது. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 6 விக்கெட்களை இழந்து 176 ரன்கள் சேர்த்தது.

அதன்பின்னர் ஆடிய பெங்களூர் அணி கோலி(77), தினேஷ் கார்த்திக்(28) ஆகியோரின் அதிரடியால் 4 பந்துகள் மீதமிருக்க இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆட்டநாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டியின் போது வர்ணனை செய்துகொண்டிருந்த டிவில்லியர்ஸ் மற்றும் ஸ்காட் ஸ்டைரிஸ் ஆகிய இருவருக்கும் இடையே ஒரு வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்படி இந்த போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெறாது என்று ஸ்டைரிஸும், பெங்களூரு அணி நிச்சயம் வெற்றி பெறும் என்று டிவில்லியர்ஸும் அடித்துக் கூறினர்.

இது ஒரு கட்டத்தில் பந்தயமாக மாற ஒருவேளை பெங்களூர் அணி வெற்றி பெற்றால் இனி அந்த அணி ஆடும் அனைத்து போட்டிகளின் போதும் ஸ்டைரிஸ் அந்த அணியின் டிஷர்ட்டை போட்டுக்கொண்டு வந்து வர்ணனை செய்யவேண்டும். அதே போல் பெங்களூர் அணி தோற்றுவிட்டால் டிவில்லியர்ஸ் சென்னை அணியின் போட்டிகளின் போது அந்த அணியின் ஜெர்ஸியை அணிந்து கொள்ள வேண்டும் என சவால்  விட்டுக் கொண்டனர். 
 
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
ஐபிஎல் திருவிழா… வின்னர் vs ரன்னர்... டாஸ் வென்ற குஜராத் அணி எடுத்த முடிவு!