வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 26 மார்ச் 2024 (09:59 IST)

இன்று CSK vs GT மோதல்; சென்னையில் நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!

இன்று சென்னையில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிக்காக பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் சேவை நள்ளிரவு 1 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.



ஐபிஎல் போட்டிகள் தொடங்கி கோலாகலமாக நடந்து வரும் நிலையில் தொடக்க போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆர்சிபியை எதிர்கொண்ட சிஎஸ்கே அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில் இன்று நடைபெற உள்ள சிஎஸ்கே vs குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டியும் சென்னையில்தான் நடைபெற உள்ளது. சேப்பாக்கம் சென்று வரும் ரசிகர்கள் பயண வசதிக்காக இன்று சென்னை மெட்ரோ நள்ளிரவு 1 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோவில் இரவில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க முன்கூட்டியே பயணச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது,. டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமாகவோ, அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களிலோ பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K