1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 14 ஜூன் 2023 (08:09 IST)

திடீர்னு சிஎஸ்கே இன்ஸ்டா பக்கத்தில் வெளியான தோனி வீடியோ… குழப்பத்தில் ரசிகர்கள்!

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரை சிஎஸ்கே அணி வென்றது. இதன் மூலம் ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது தோனி தலைமையிலான சிஎஸ்கே . இந்த சீசனோடு ஓய்வு பெறுவார் என நினைக்கப்பட்ட தோனி, ஓய்வு பற்றி யோசிக்க 6 முதல் 9 மாத காலம் உள்ளது எனக் கூறியிருந்தார்.

அதனால் அவர் அடுத்த சீசனிலும் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவார் என்ற ஆவலோடு ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் சிஎஸ்கே அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ள ஒரு வீடியோ ரசிகர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

அந்த வீடியோவில் இந்த சீசனில் தோனியின் சில தருணங்கள் காட்சிப்படுத்தப்பட்டு ஒரு பேர்வெல் வீடியோ போல உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் தோனியின் கடைசி சீசன் இதுதானா என ரசிகர்கள் குழம்பியுள்ளனர். 
 
https://www.instagram.com/p/CtbqvCtBIV5/