1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 12 ஜூன் 2023 (14:59 IST)

சண்ட வந்தா களத்துல மட்டும்தான்.. கோலி, கம்பீர் உடனான உறவு குறித்து கம்பீர்!

இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் இப்போது பாஜக எம்பியாக இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணி பற்றியும் கிரிக்கெட் பற்றியும் விமர்சனங்களை வைத்து வருகிறார். துணிச்சலாக பலரைப் பற்றியும் தன் கருத்துகளை வெளிப்படுத்தி வருபவர். அதிலும் இவர் தோனி மற்றும் கோலி குறித்து அடிக்கடி கடுமையான விமர்சனங்களை வைத்து வருபவர் என்பதால் இருவரின் ரசிகர்களாலும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.

சமீபத்தில் கூட ஐபிஎல் தொடரில் விராட் கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அது பெரிய சர்ச்சையானது. தொடர்ந்து இதுபோல சர்ச்சைகளில் சிக்கி வருவதால் கம்பீர் ஒரு கோபமானவர் என்ற அடையாளமே அவர் மேல் இருக்கிறது.

ஆனால் வாக்குவாதம் எல்லாம் களத்துக்குள் மட்டும்தான் எனக் கூறியுள்ளார் கம்பீர். இதுபற்றி அவரின் பேச்சில் “தோனி மற்றும் விராட் கோலியுடன் எனது உறவு ஒன்றுதான். எங்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டால், அது களத்தில் மட்டுமே இருக்கும், வெளியில் அல்ல. தனிப்பட்டதாக விஷயமாக எதுவும் இல்லை. என்னைப் போலவே அவர்களும் போட்டியை வெற்றி பெற விரும்புகிறார்கள்.” எனக் கூறியுள்ளார்.