1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 12 ஜூன் 2023 (08:10 IST)

தோனி, தனது அண்ணனை வேண்டுமென்றே புறக்கணிக்கிறாரா?- திடீர்னு கிளம்பிய சர்ச்சை!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் வீரராக உள்ளார். 2019 ஆம் ஆண்டு சர்வதேசக் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற இப்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார்.

2011 ஆம் ஆண்டு அவர் தலைமையில் இந்திய அணிக்கு உலகக்கோப்பை பெற்றுத் தந்ததை அடுத்து அவரின் புகழ் பல மடங்கு பெருகியது. அதையடுத்து 2016 ஆம் ஆண்டு அவரின் பயோபிக் திரைப்படம் “எம் எஸ் தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி” என்ற பெயரில் வெளியானது. இந்த படத்தில் தோனியின் குடும்பத்தை பற்றி காட்டும் போது அவருக்கு ஒரு அக்கா மட்டுமே இருப்பது போல காட்டப்பட்டது. ஆனால் நிஜ வாழ்வில் தோனிக்கு நரேந்திர சிங் தோனி என்ற அண்ணன் உள்ளார்.

இந்நிலையில் இப்போது திடீரென்று ரசிகர்கள் தோனியின் அண்ணன் புகைப்படத்தை எடுத்துப் பகிர்ந்து தோனி அவரது அண்ணனை வேண்டுமென்றே புறக்கணிக்கிறார் என்று விமர்சனப் பதிவுகளை பதிவிட்டு வைரல் ஆக்கி வருகின்றனர். முன்னதாக இதுகுறித்து பேசி இருந்த நரேந்தர் “இந்த படம் தோனியைப் பற்றியது. அவன் குடும்பத்தைப் பற்றியது இல்லை” எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.