வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 30 செப்டம்பர் 2023 (08:31 IST)

உலகக் கோப்பை தொடருக்கான வர்ணனையாளர் குழு அறிவிப்பு!

அக்டோபர் 5 ஆம் தேதி முதல் உலகக் கோப்பை தொடர் தொடங்க உள்ளது. இதற்காக இந்தியாவுக்கு அனைத்து அணிகளும் வந்து சேர்ந்து இப்போது பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் உலகக் கோப்பை தொடரை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஆங்கிலம் உள்பட பிராந்திய மொழிகளிலும் வர்ணனையை வழங்கி வருகிறது. இந்நிலையில் இப்போது உலகக் கோப்பை தொடருக்கான வர்ணனையாளர் குழுவை அறிவித்துள்ளது.

வர்ணனையாளர் குழு
ரிக்கி பாண்டிங், இயான் மோர்கன், ஷேன் வாட்சன், லிசா ஸ்தாலேக்கர், ரமிஸ் ராஜா, ரவி சாஸ்திரி, ஆரோன் ஃபின்ச், சுனில் கவாஸ்கர், மேத்யூ ஹைடன், நாசர் ஹுசைன், இயன் ஸ்மித், இயன் பிஷப், வக்கார் யூனிஸ், ஷான் பொல்லாக், அஞ்சும் சோப்ரா, அதர்டன், சைமன் டவுல், எம்புமெலெலோ எம்பாங்வா, சஞ்சய் மஞ்ச்ரேக்கர், தினேஷ் கார்த்திக், சுப்ரமணியம் பத்ரிநாத், அதர் அலி கான், ரஸ்ஸல் அர்னால்ட், ஹர்ஷா போக்லே, காஸ் நைடூ, மார்க் நிக்கோலஸ், நடாலி ஜெர்மானோஸ், மார்க் ஹோவர்ட், இயன் வார்டு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்