திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 19 நவம்பர் 2022 (09:14 IST)

கர்மா விளையாடிவிட்டது… கோலியை நீக்கிய தேர்வுக்குழுவே காலி… பிசிசிஐ அதிரடி முடிவு

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழு முழுவதுமாக கலைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணிக்கான வீரர்களை தேர்வு செய்யும் தேர்வுக்குழுவுக்கு சேத்தன் சர்மா தலைமை வகித்து வந்தார். இவர்கள் தேர்வு செய்த அணி இதுவரை கோப்பையை வென்றதில்லை என்பதால் இவர்கள் மேல் விமர்சனம் இருந்தது.

ஆனால் இந்த குழு மீது ரசிகர்கள் மிகப்பெரிய அதிருப்தி அடையக் காரணம், விராட் கோலியிடம் இவர்கள் நடந்துகொண்ட விதம்தான். டி 20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகிய கோலி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக தொடர்வேன் என்று கூறியிருந்தார்.

ஆனால் அவரை ஆலோசிக்காமலேயே ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இருந்தும் நீக்கப்பட்டார். இது ரசிகர்களுக்குக் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்த, அடுத்து டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக கோலி அறிவித்தார்.

இந்நிலையில் இப்போது சேத்தன் சர்மா உள்ளிட்ட மொத்த தேர்வுக்குழுவும் கலைக்கப்பட்டுள்ளதை ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.