உலகக் கோப்பை தொடரில் 100 போட்டிகளை விளையாடிய ஒரே அணி… ஆஸி படைத்த சாதனை!
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இரு தினங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆஸி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டி ஆஸி அணிக்கு ஒரு வரலாற்று சிறப்புமிக்க போட்டியாக அமைந்தது. அது என்னவென்றால் உலகக் கோப்பை தொடர்களில் ஆஸி அணி விளையாடிய 100 ஆவது போட்டி என்பதுதான்.
1975 ஆம் ஆண்டு முதல் உலக கோப்பை தொடர்கள் நடந்துவரும் நிலையில் இதுவரை 5 முறை உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளது. பெரும்பாலான தொடர்களில் நாக் அவுட் போட்டிகள் வரை சென்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.