229 ரன்களில் சுருண்ட இந்தியா..! இங்கிலாந்தை மடக்கி சாதிக்குமா?
இன்று நடைபெற்று வரும் இந்தியா – இங்கிலாந்து போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 229 ரன்கள் மட்டுமே பெற்றுள்ளது.
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு எடுக்க பேட்டிங் இறங்கிய இந்தியாவிற்கு இன்று சாதகமான சூழல் அமையவில்லை.
ரோகித் சர்மா நின்று விளையாடி 87 ரன்கள் வரை குவித்து அணியை முன்னோக்கி நகர்த்தினார். ஆனால் ஷுப்மன் கில் (9), விராட் கோலி (0), ஷ்ரேயாஸ் ஐயர் (4) என சொற்ப ரன்களின் அவுட் ஆனதால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார்கள். பின்னர் இறங்கிய கே.எல்.ராகுல் (39), சூர்யகுமார் யாதவ் (49) நல்ல ரன்களை குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
என்றாலும் சீக்கிரத்திலேயே விக்கட்டுகள் பல விழுந்து விட்டதால் அதிரடி ஆட்டத்தை காட்ட முடியாத சூழல் காரணமாக இறுதியில் விளையாடிய பும்ரா, குல்தீப் யாதவ் டீசண்டாக விளையாடி அணியின் ஸ்கோரை 229 ஆக நிறைவு செய்துள்ளனர். 230 என்ற டார்கெட்டில் இறங்கும் இங்கிலாந்தை இந்திய அணி தனது அதிரடியான பவுலிங், ஃபீல்டிங்கில் கட்டுப்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Edit by Prasanth.K