வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (16:23 IST)

போராடி கௌரவமான ஸ்கோரை எட்டிய ஆஸி.. 263 ரன்களுக்கு ஆல் அவுட்!

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது.

இந்திய அணியின் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறிய ஆஸி அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் காவாஜா 81 ரன்கள் அடித்து அணிக்கு வலு சேர்த்தாலும் இன்னொரு பக்கத்தில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருக்கின்றன.

ஆனால் பின் வரிசை வீரர்கள் நிதானமாக விளையாடி, ஸ்கோர்களை சேர்த்தனர். 6 ஆவது வீரராக களமிறங்கிய அலெக்ஸ் கேரி 72 ரன்கள் சேர்த்து அணியைக் கௌரமான ஸ்கோருக்கு அழைத்து சென்றார்.

இந்திய அணி சார்பில் முகமது ஷமி 4 விக்கெட்களும், அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.