1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 1 அக்டோபர் 2022 (21:24 IST)

ஆசிய கோப்பை பெண்கள் டி-20 ; இலங்கையை வீழ்த்திய இந்தியா

ASIACUP
ஆசிய கோப்பை பெண்கள் டி-20 கிரிக்கெட் போட்டியில்  இலங்கை அணியை வீழ்த்தியுள்ளது இந்திய அணி.

சமீபத்தில் ஆடவர்க்கான ஆசியக் கோப்பை முடிந்துள்ள நிலையில், தற்போது வங்கதேச நாட்டில் பெண்களுக்கான டி-20 போட்டி நடந்து வருகிறது.

இன்றைய போட்டியில் இந்திய அணி இலங்கையை எதிர்கொண்டது. முதலில் டாஸ் வென்ற இலங்கை பந்து வீச முடிவு செய்தது. எனவே முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது.

20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற் 150 ரன்கள் எடுத்து, இலங்கைக்கு 151 ரன் கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து பேட்டிங் செய்த இலங்கை அணியினர் 18.2 ஓவர்களில் 109 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகள் இழந்து தோற்றது.

இந்திய அணி 41 ரன் கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆசிய கோப்பை தொடரின்  இந்தியாவின் முதல் வெற்றிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

 Edited by Sinoj