செவ்வாய், 6 ஜூன் 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (10:06 IST)

இப்ப போறோம்.. ஆனா அதிரடியா திரும்பி வருவோம்! – விராட் கோலி ட்வீட்!

Virat Kohli
நேற்று நடந்த ஆசியக்கோப்பை போட்டியில் இந்தியா வென்றாலும் போட்டியிலிருந்து வெளியேறிய நிலையில் அதுகுறித்து விராட் கோலி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஆசியக்கோப்பை டி20 போட்டியில் இந்தியா விளையாடி வந்த நிலையில் கடந்த பாகிஸ்தானுடனான போட்டியில் தோல்வி அடைந்ததால் அடுத்த சுற்று செல்லும் வாய்ப்பை தவறவிட்டது.

எனினும் நேற்று ஆப்கானிஸ்தான் உடன் நடந்த போட்டியில் 101 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை சுருட்டி இமாலய வெற்றி பெற்றது இந்தியா.


முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை குவித்தது. ரொம்ப நாளாக ஆவுட் ஆஃப் பார்மில் இருந்த விராட் கோலி இந்த ஆட்டத்தில் இறங்கி அடித்தார். 61 பந்துகளில் 12 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் விளாசி 122 ரன்களை குவித்தார். 3 ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலி அடிக்கும் முதல் செஞ்சுரி இதுவாகும். இந்த ஆட்டத்தின் ஆட்ட நாயகனாகவும் கோலி தேர்வானார்.


இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள விராட் கோலி “ஆசியக்கோப்பை தொடருக் அன்பும், ஆதரவும் அளித்த அனைவருக்கும் நன்றி. நாங்கள் சிறப்படைவோம். மீண்டும் வலிமையுடன் திரும்பி வருவோம்” என்று தெரிவித்துள்ளார். நீண்ட ஆண்டுகள் கழித்து கோலி சதம் அடித்ததை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.