1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated: சனி, 1 அக்டோபர் 2022 (09:09 IST)

கோலியின் சாதனையை சமன் செய்த பாபர் ஆசம்!

டி 20 போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸ்களில் 3000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்திருந்தார்.

உலக கிரிக்கெட்டில் இப்போது கோலோச்சும் வீரர்களில் பாபர் ஆசம் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் முன்னணியில் உள்ளனர். இந்நிலையில் நேற்று நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டி 20 போட்டியில் 89 ரன்கள் சேர்த்த பாபர் ஆசம் குறைந்த போட்டிகளில் 3000 ரன்களைக் கடந்த வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார்.

கோலி மற்றும் பாபர் ஆசம் இருவருமே இந்த மைல்கல்லை 81 இன்னிங்ஸ்களில் நிகழ்த்தியுள்ளார். இவர்களுக்கு அடுத்த இடத்தில் மார்ட்டின் கப்தில் 101 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டினார் எப்ன்பது குறிப்பிடத்தக்கது.