ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 17 பிப்ரவரி 2024 (08:12 IST)

அதை செய்துவிட்டுதான் ஓய்வை அறிவிக்க வேண்டும்- அஸ்வினுக்கு கும்ப்ளே அன்புக் கட்டளை!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 445 ரன்கள் சேர்த்தது. இந்தியா சார்பாக ரோஹித் ஷர்மா மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் சதமடித்தனர்.

இந்நிலையில் இந்திய அணி பந்துவீசிய போது ஸாக் க்ராவ்லி விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். இது டெஸ்ட் போட்டிகளில் அவரின் 500 ஆவது விக்கெட்டாகும். இந்திய அணியில் 500 விக்கெட்களுக்கு மேல் வீழ்த்திய இரண்டாவது பவுலர் என்ற சாதனையை இதன் மூலம் அஸ்வின் படைத்துள்ளார்.

ஆட்டநேர முடிவுக்குப் பின்னர் அஸ்வினுடன் பேசிய அனில் கும்ப்ளே “டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் 625 அல்லது 630 விக்கெட்களை வீழ்த்திய பிறகுதான் ஓய்வு பெறவேண்டும்.  உங்கள் சாதனை அதற்கு குறைவாக இருக்கக் கூடாது” என கோரிக்கை வைத்துள்ளார். அனில் கும்ப்ளே 619 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.