1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (15:33 IST)

500வது விக்கெட்டை வீழ்த்தினார் அஸ்வின் ரவிச்சந்திரன்.. குவிந்து வரும் வாழ்த்துக்கள்..!

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் 500வது விக்கெட்டை அஸ்வின் ரவிச்சந்திரன் வீழ்த்தியதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
 
டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது இந்திய வீரர் என்றும் புதிய சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். ஏற்கனவே 619 விக்கெட்டுகளுடன் கும்ப்ளே முதலிடத்தில் உள்ள நிலையில், தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் 2வது இடம் பிடித்துள்ளார்.
 
இலங்கை அணியின் முத்தையா முரளிதரன் 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 500 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் அஸ்வின் 98 போட்டிகளில் விளையாடி 500 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். இந்திய அணியின் அனில் கும்ப்ளே 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 500 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் குறைந்த போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது வீரர் என்ற பெருமையை அஸ்வின் அடைந்திருக்கிறார்.
 
Edited by Mahendran