செவ்வாய், 21 மார்ச் 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated: புதன், 23 நவம்பர் 2022 (19:10 IST)

சொகுசு விடுதி? யுவராஜ் சிங்கிற்கு அரசு நோட்டீஸ்...ரசிகர்கள் அதிர்ச்சி

கோவா  மாநில அரசு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ் சிங். இவர்,  சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், டி-20 கிளப் அணிகளில் இணைந்து விளையாடி வருவதுடன்,  விளம்பரங்களில் நடிப்பு, சொந்த தொழிலி கால் பதித்து வெற்றிகரமாக இயங்கி வருகிறார்.

இந்த நிலையில்,  யுவராஜ்சிங்கிற்கு கோவாவில் ஒரு சொகுசு வீடு உள்ளது, இதனை வாடகைக்கு விடும் அவர், சமீபத்தில் தன் சமூகவலைதளத்தில்,  இதுகுறித்துப் பதிவிட்டிருந்தார்.

இதைப் பார்த்த கோவா மாநில அரசு,யுவராஜ் சிங்கிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோவா மாநிலத்தில் விடுதி நடத்த அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்பதால்,  யுவராஜ் இதுகுறித்து அனுமதி பெறவில்லை என தெரிகிறது. எனவே டிசம்பர் 8 ஆக்ம் தேதி காலை 11 மணி அளவில்  நேரில் ஆஜராக வேண்டுமென கோவா சுற்றுலாத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Edited by Sinoj