வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 15 நவம்பர் 2022 (14:43 IST)

இந்திய அணியில் மீண்டும் தல தோனி? பிசிசிஐ ஆலோசனை

Dhoni
இந்திய அணியில் மீண்டும் தல தோனி களம் இறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மீது நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் அனுபவமுள்ள தோனியை மீண்டும் இந்திய அணிக்கு அழைத்து வந்து கேப்டன் பதவியை கொடுக்க பிசிசிஐ ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது 
 
ஒருவேளை தோனி அதற்கு ஒப்புக் கொள்ளாவிட்டால் இந்திய அணியின் கெளரவ ஆலோசகராக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இந்திய அணிக்கு கேப்டன் அல்லது முக்கிய பொறுப்புக்கு மீண்டும் தல தோனி வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Mahendran