1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: சனி, 21 ஜூலை 2018 (20:12 IST)

பெண்களுக்கு பாதுகாப்பில்லை; சென்னை வர மறுத்த சுவிட்சர்லாந்து வீராங்கனை

சென்னையில் நடைபெற்று வரும் உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில், இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடு என்று பெற்றோர் சொன்னதால் சுவிட்சர்லாந்தின் முன்னணி வீராங்கனை போட்டியிலேயே பங்கேற்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

 
தமிழ்நாடு ஸ்குவாஷ் ராக்கெட் சங்கம் சார்பில் 13வது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டிகள் ஜூலை 18ஆம் தேதி தொடங்கிய நிலையில் வரும் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, பின்லாந்து உள்ளிட்ட 28 நாடுகளை சேர்ந்த 171 வீரர், வீராங்கனைகளும், இந்தியா சார்பில் 12 பேரும் பங்கேற்றுள்ளனர்.
 
தற்போது இந்தியாவிலுள்ள பெண்களின் பாதுகாப்பை காரணம் காட்டி சுவிட்சர்லாந்தின் முன்னணி வீராங்கனை ஒருவர் உலக ஸ்குவாஷ் போட்டியில் பங்கேற்காதது தெரியவந்துள்ளது. 
 
இதுதொடர்பாக சுவிட்சர்லாந்து அணியின் தலைமை பயிற்சியாளரான பாஸ்கல் புரின் கூறியதாவது:-
 
எங்களது நாட்டின் சார்பில் இரண்டு பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள் என்று ஆறு வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளோம். ஆனால், நாட்டின் முதல்நிலை வீராங்கனையான அம்பர் அலின்கெக்ஸ் இந்தியாவில் பெண்களுக்கு நிலவும் ஆபத்தான சூழ்நிலையால் இந்த போட்டியில் பங்கேற்கவில்லை என்பது வருத்தமான ஒன்று என்று கூறியுள்ளார்.