1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 3 ஜனவரி 2025 (16:46 IST)

குஷ்பு கைது கண்டிக்கத்தக்கது: அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

Annamalai
நடிகை குஷ்பு உள்பட பாஜக மகளிரணி நிர்வாகிகளைக் காவல்துறை கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்தும், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியும், 
தமிழக பாஜக மகளிரணி சார்பாக இன்று நடைபெறும் நீதிப் பேரணியில் கலந்து கொண்ட, மாநில மகளிரணித் தலைவி திருமதி  உமா பாரதி அவர்கள், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திருமதி டாக்டர் சி சரஸ்வதி  அவர்கள், 
பாஜக  தேசியச் செயற்குழு உறுப்பினர் திருமதி குஷ்பு  அவர்கள் மற்றும்
மகளிரணி நிர்வாகிகளைக் காவல்துறை கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
 
ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில், திமுகவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்காகச் செயல்படும் திமுக அரசின் உண்மை முகம், பொதுமக்களிடையே அம்பலப்பட்டுக்கொண்டிருக்கிறது.
 
முன்னதாக தடையை மீறி நீதிப்பேராணை நடத்த முயன்ற நடிகை குஷ்பு உட்பட பாஜக நிர்வாகிகள் மதுரை காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran