சர்வதேச பட்டினிப் பட்டியலில் இந்தியாவுக்கு 94ஆவது இடம்
107 நாடுகள் இடம்பெற்றிருக்கும் சர்வதேச பட்டினிப் பட்டியலில் இந்தியா 94ஆவது இடத்தை பிடித்துள்ளது என்கிறது செய்தி.
கடந்த ஆண்டு 102 இடத்திலிருந்து இந்தியா தற்போது 94ஆவது இடத்தில் இருந்தாலும், வங்கதேசம், நேபாளம், பாகிஸ்தான் போன்ற நாடுகளைவிடவும் பட்டினிப் பட்டியலில் இந்தியா பின் தங்கியுள்ளது.
உலகளவில் ஊட்டச்சத்து குறைப்பாடு உள்ள மக்கள் மற்றும் பட்டினியால் வாடும் மக்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
வெத்தங்கர்ஹில்ஃப் மற்றும் சன்சர்ன் வேல்ர்ட்வைட் ஆகிய அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் இந்தியாவில் பட்டினியால் வாடுவோரின் எண்ணிக்கை விகிதம் 27.2ஆக உள்ளது.
132 நாடுகளில் பட்டினியால் வாடுவோரின் எண்ணிக்கையை கணக்கெடுத்த இந்த ஆய்வில் வெறும் 107 நாடுகளின் விவரங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன என விவரிக்கிறது அச்செய்தி.