திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 26 நவம்பர் 2024 (10:49 IST)

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி:

Sakthikanda das
இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவர் சக்தி காந்ததாஸ், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அசிடிட்டி பிரச்சனை காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.  
 
இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவர், சக்தி காந்ததாஸ் திடீரென உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பயப்படும் அளவுக்கு எந்தவிதக் குறையும் இல்லை. அசிடிட்டி பிரச்சினை மட்டுமே காரணமாக இருப்பதாகவும், சில மணி நேரத்தில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும், ரிசர்வ் வங்கியின் செய்தி தொடர்பாளர் கூறினார்.
 
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சக்தி காந்ததாஸ் அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவரது உடல் நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர், என்று மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது.
 
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சக்தி காந்ததாஸ், தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றியுள்ளார். அவர் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றினார். மத்திய நிதித்துறை செயலாளராகவும் அவர் பணியாற்றினார். 2018 ஆம் ஆண்டு முதல், அவர் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக பதவியில் உள்ளார்.
 
 
 
Edited by Mahendran